சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் அன்னைக்கு பிரமாண்ட சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக,
இன்று சட்டப்பேரவை அறிக்கையில், ஜெயலலிதா அறிக்கை வாசித்துள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை போன்று மிக பிரமாண்ட சிலையில் மதுரையில் அமைக்க தாம் திட்டமிட்டு இருப்பதாகவும், அங்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட நினைவுப் பூங்கா ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும்,
110 வது விதியின் கீழ் அறிக்கையை வாசித்துள்ளார் தமிழக முதல்வர். மேலும், தமிழை மொழி பெயர்க்கும் எழுத்தாளர்களுக்கு விருது, தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களுக்கு முதல்வர் விருது, மற்றும் தமிழ் சம்பந்தப்பட்ட துறைகளில் சாதித்தவர்களுக்கு உமரு புலவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த சங்ககால தமிழ் இலக்கணம், இலக்கியங்களை பாதுகாக்கும் வகையில் அமையப்பெறவுள்ள இத்திட்டத்துக்கு ரூபாய் 100 கோடி வரை திட்ட செலவுகள் இருக்கும் என்றும் முதல்வர் கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் அன்னையின் சிலையும் பூங்காவும் அமைக்க ஆகும் செலவு சுமார் 100 கோடி ரூபாய். இந்தப் பணத்தை ஈழத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தினால் தமிழ் அன்னை மிகவும் மகிழ்வாள் ! :-)