Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சிறிலங்காவில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

இந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் எதிர்க்கட்சிகளின் கடமையாகாது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் நிலவும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதும் எதிர்கட்சிகளின் முக்கியமான பணியாகும். ஆனால் மின்கட்டண உயர்வுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைக் கூட சரியான முறையில் வெளிப்படுத்தவோ, ஒருங்கமைக்கவோ எதிர்க்கட்சிகளால் முடியாத நிலை காணப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு எதிர்கட்சிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுகின்ற நிலையில், சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புக்களின் ஊடாகவே போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சிறிலங்காவின் எதிர்கட்சிகள் பலவீனமாயுள்ளன - கபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com