Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வாழும் மக்கள் தங்களை இணைக்கும் விடயங்கள் தமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் காரணிகளை விட அதிகம் என உணர்வதற்கும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் என்ற பரப்புரையோடு,
கொக்கோ கோலா நிறுவனம் புதியதோர் முயற்சியினைத் தொடங்கியுள்ளது. இவ்விரு நாடுகளும் முன்னர் இணைந்திருந்த போது மக்கள் எப்படி அன்பைப் பகிர்ந்து கொண்டார்களோ அதற்கு இணையாக இவர்களுக்கு இடையே உள்ள தடைகளை இனி அகற்றுவதற்கு ஓர் புதிய வழியை இந்நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

கொக்கோ கோலாவைப் பெறும் வசதியுடனும் டச் ஸ்கிரீன் தொழிநுட்பத்துடனும் பாகிஸ்தானின் லாஹூரிலும் இந்தியாவின் நியூடெல்லியிலும் மக்கள் ஒன்று கூடும் முக்கிய இடங்களில் தனது குளிர்பதன எந்திரங்களை (Small World Machines) நிறுவியுள்ள இந்நிறுவனம் , இவற்றின் மூலம் மக்களின் இதயங்களை இணைக்கும் வழியையும் திறந்து விட்டுள்ளது.
இந்த எந்திரத்தில் உள்ள தொடு திரையில் இரு நாட்டு மக்களும் தங்கள் கைகளைத் தொட்டுக் கொள்ளவோ, சமாதானம், அன்பு, மகிழ்ச்சி என்பவற்றைக் குறிக்கும் சின்னங்களை வரையவோ நடனமாடி புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளவோ முடியும்.

இணையத்தில் பிரபலமாகி வரும் இந்த YouTube  வீடியோ கீழே:


0 Responses to இந்திய பாகிஸ்தானிய உள்ளங்களை இணைக்கும் கொக்கோ கோலா மேஜிக் வீடியோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com