ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் மும்பை தாதா தாவூத் இப்ரஹீமின் சதி வேலை இருக்குமோ என்கிற சந்தேகம் வெளியானது. இதை அடுத்து, ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை.
சூதாட்டம் மூலம் தாவூத் இப்ரஹீம் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை என்று, அவரது நெருங்கிய நண்பரான ஷகீல் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த், சண்டியாலா, அங்கித் சவான் ஆகிய மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுடன் கைது செய்யப்பட 14 சூதாட்ட தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் கூட இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ பி எல் சூதாட்டத்தில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ரஹீமுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்து வந்தனர். மேலும் அவரது நெருங்கிய கூட்டாளியான சேர்ந்த சுனில் என்பவருக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில் தாவூத்தின் வலது கரமாக செயல்பட்டு வரும் சோட்டா ஷகீல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பெட்டியில் சூதாட்ட தொடர்பை மறுத்துள்ளார்.
அதில் "ஆரம்ப காலக் கட்டங்களில் நாங்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான். தாவூத்தின் நம்பகத்துக்கு உரியவரான சரத் அன்னா என்பவர்தான் கிரிக்கெட் சூதாட்ட விஷயங்களை கவனித்து வந்தார். சரத் 2002ம் ஆண்டு இறந்த பின்னர் நாங்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை விட்டு விலகிவிட்டோம். தாவூத் எங்கள் அனைவரையும் கிரிக்கெட் சூதாட்டத்தை விட்டு விலகி விடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார். அதன் பின்னர் நாங்கள் ரியல் எஸ்டேட்டில் களம் இறங்கினோம். கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள் மீது எந்த புகாரும் எழவில்லை.
தாவூத்தின் சகோதரர் அனீஸ் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் இதில் தொடர்பு கிடையாது. தற்போது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக துபாயை சேர்ந்த சுனில் என்பவரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்காக சூதாட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அர்த்தம் இல்லை. சுனில் மட்டுமல்ல சூதாட்டத்தில் ஈடுபடும் பலரையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். கிரிகெட் சூதாட்டத்தின் மூலம் பணம் சம்பாதிக்க தாவூத் விரும்பவில்லை. சில ஊடகங்கள் தவறாக திரித்து எழுதுகின்றன. இதன் மூலம் தங்களது டி ஆர் பி ரேட்டை உயர்த்திக் கொள்ளவே இந்த வம்பு." என்று கூறியுள்ளார் அவர்.
0 Responses to ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை:தாவூத் இப்ரஹீம் நெருங்கிய நண்பர் ஷகீல்!