Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றலையும்; மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், போரினால் தாய் தந்தையர் இழந்த பிள்ளைகள்,; பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் நெஞ்சுருக ஏற்றி அஞ்சலி செய்தனர்.

உணர்வுபூர்வமாக நடைபெற்ற இப்பிராத்தனை நிகழ்வில் மனோ கணேசன், சிறிதுங்க வீரசூரிய, மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், மனித உரிமை ஆர்வலரும் சிரேஸ்ட எழுத்தாளருமான சண்மாஸ்டர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் ரவீந்திரன் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தனிநாயகம்பிள்ளை ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினார்கள்.

மக்களின் கண்ணீர் மழையுடன் நடைபெற்ற இப்பிராத்தனைக் கூட்டத்தில் இறுதி யுத்தத்தில் பெற்றோரை இழந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு பிரான்ஸ் நாட்டின் புலம்பெயர் சமுகத்தினரின் நிதிப்பங்களிப்புடன் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான கணக்குப் புத்தகங்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கடும் எதிப்புகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
உயிர் துறந்த உத்தமப்பெரும் உறவுகளுக்கு மட்டக்களப்பில் கூட்டமைப்பினர் உளமார அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த பிரார்த்தனை நிகழ்விற்கு இலங்கை தழிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமை தாங்கியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான சட்டத்தரணி துரைராசசிங்கம், பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரன்,, இரா துரைரெத்தினம், கிருஸ்ணபிள்ளை, நடராசா மற்றும் அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கலையரசன் ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சேயோன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

0 Responses to மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com