பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால்
இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியான
´´மார்பிள் ஆர்ச்´´ பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ´´பிக்காடிலி
சர்க்கஸ்´´ வரை இடம்பெற்றது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற
தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இருந்தபோதும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் வரை அந்த நாட்டை பிரிட்டன் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தார்கள். இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் அங்கு நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமரும் பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத் தொடர்பாளரான சாம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அவருக்கு பிரித்தானிய பிரஜைகள் என்ற வகையில் தாம் தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுப்போம் என்று கூறிய சாம் கிருஷ்ணா பிரதமரின் அந்த முடிவு சர்ச்சைக்குரிய முடிவு என்று துணைப்பிரதமர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசாங்க ஆதரவுடனான பேரினவாதச் சக்திகள் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் கூறிய சாம் கிருஷ்ணா தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு
பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று
சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்நினைவெழுச்சி பேரணி
மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து
கொண்டுஎதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய
நாடுகளின் மகா நாட்டில் கலந்துகொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட்
கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும்
வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4
மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3மணிக்கு Waterloo Place இல்
பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ்
மக்கள்பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo
Place ஐ பேரணி சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில்கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவு மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிய ஐ.நா ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் சென்றனர். பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின
மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும்கவனத்தை ஈர்த்தன.மாலை 4 மணி
அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம்
ஆரம்பமானது.
இதில் இந்தியாவில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கும் இந்திய கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவரும் இந்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் உலக தமிழர் இயக்கதலைவர் பழ நெடுமாறன் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வை.
கோபாலசாமி மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

0 Responses to லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி (படங்கள் இணைப்பு)