முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது .
யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .
உலகநாடுகளை ஏமாற்றி,இராணுவ உதவிபெற்ற சிங்களம்,தமிழினத்தை சிதைத்தழித்த, தமிழினத்தைக் கொன்றுகுவித்த முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நெஞ்சம் மறக்குமா? நினைவின் கண்காட்சியும்,வணக்க நிகழ்வும் பீலபெல்ட் நகர்மத்தியில்,யேர்மன் மக்கள் மிக நெருக்கமாக நடமாடும் இடத்தில் நடைபெற்றது.
கண்காட்சியை,யேர்மன் மக்கள் உட்பட,பல பிறமொழி மக்களும் மிகவும் ஆர்வமாகப் பார்வையிட்டதுடன்,தங்கள் வேதனைகளையும்,சுதந்திரத் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.
நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
0 Responses to முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்