Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை சுமார் இரு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொலைபேசியூடாக தொடர்புகளை பேணியமை தொடர்பாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தன் கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை சென்றிருந்தார். அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்; சென்றிருந்தார்கள். குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா சிறைச்சாலையில் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலுள்ள இலக்கங்களிலிருந்து தனது தொலைபேசிக்கு அழைப்புகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தனது தொலைபேசியிலிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தே அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அவ்வாறான அழைப்புகள் தொடர்பில் விளக்கங்களை கேட்டதுடன் இந்த அழைப்புகளின் போது எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் வினவினர் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும்  தனது இலக்கம் பலக்குத் தெரியும் என்றும் தான் பதிலளித்ததாக தெரிவித்தார். அதேவேளையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தேன் என அவர் மேலும் கூறினார். 

0 Responses to வவுனியா சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்பு! சிவசக்தி ஆனந்தனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com