Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


குயின் எலிசபெத் 2 பயணிகள் கப்பலை விட 9 மடங்கு பெரியதும் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டதுமான 1998 QE2 எனும் 2.7Km நீளமுடைய விண்கல் ஒன்று மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் திகதி அளவில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது.

இக்கல்லின் சுற்றுவட்டப் பாதைப்படி இது பூமியில் மோதாது என உறுதிபடக் கூறியுள்ள விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 5.8 மில்லியன் Km தூரத்தில் இது கடந்து செல்லும் எனக் கூறியுள்ளனர்.

இத்தூரம் பூமிக்கும் நிலவுக்குமான தூரத்தின் 15 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விண்கல் பூமிக்கு அருகில் வரும் போது அதன் அளவு, வடிவம், சுழற்சி, மற்றும் தரையியல்புகள் என்பவற்றுடன் இக்கல்லின் தோற்றம் குறித்தும் ஆராயவதற்கு விஞ்ஞானிகள் முயலவுள்ளனர். ஏற்கனவே கடந்த 17 ஆம் திகதி நிலவில் 56 000 mile per hour வேகத்தில் ஒரு பெரிய விண்கல் மோதி மிகப் பிரகாசமான ஒளியை வானியலாளர்கள் அவதானித்திருந்தனர். இம்மோதலின் போது 5 டன் டிஎன்டி வெடிபொருள் வெடித்ததற்கு நிகரான சேதம் ஏற்பட்டதாகவும் கணிக்கப் பட்டது. மேலும் இம்மோதலினால் ஏற்பட்ட குழியினை நாசாவின் நிலா ஆய்வு செய்மதி (Lunar Reconnaissance Orbiter) மூலம் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 15 இல் ரஷ்யாவின் Chelyabinsk பகுதியில் மோதிய விண்கல்லால் 1500 பேர் காயமடைந்திருந்தனர். இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பாரிய வான் வழியிலான அனர்த்தம் இதுவாகும். இதைத் தொடர்ந்து உலகம் முழுதும் வானியலாளர்களிடம் விண்கற்களினால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜூன் 1 ஆம் திகதி 2.7 Km நீளமுடைய 1998 QE2 எனும் விண்கல் பூமியைக் கடந்து செல்கின்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com