Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே 18 திகதியை ஏன் இனப்படுகொலை தினமாக பிரச்சாரப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய தம்மிடம் விசாரணைகளை பயங்கரவாத குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இப்பத்திரிகையாளர் மாநாட்டினில் மணிவண்ணனுடன் கட்சியின் பொதுசெயலர் செல்வராசா சஜேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.



மக்களிடம் எமது கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவுப்புலத்தை  கண்டு அச்சங்கொண்டே அரசு இத்தகைய விசாரணைகளை முடுக்கிவிடுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.எம்மை எவ்வாறேனும் முடக்கிவிடுவதே அரச தரப்பினது நோக்கமாக இருந்திருந்ததென அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியின்   தலைவர்கள் பலரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று நீண்ட நேரம் இவர்களிடம் விசாரைண இடம்பெற்றுள்ளது. கடந்த 18 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுட்டித்தபோது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் நான் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தோம்.பொலிஸ் பிணையினிலேயே நாமும் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

குறிப்பாக மே 18ம் திகதியை தெரிவு செய்தமை அதற்கான காரணங்கள் மக்களுக்கா புலிகளுக்கா அஞ்சலியென பல கேள்விகள் துருவி துருவி கேட்கப்பட்டதாக அப்பத்திரிகையாளர் மாநாட்டினில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி வடிவமைப்புச் செய்யப்பட்ட பதாகைகள் அடங்கிய பென்ரைவ் உள்ளிட்ட சில பொருட்களையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் அவை குறித்து விசாரணையின்போது கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரியவிக்கப்பட்டது.

0 Responses to மே 18 ஏன் இனப்படுகொலை நினைவு தினமானது! சந்தேகத்தினில் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com