Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஷ் ஷெரிப், புதிய ஆட்சி அமைப்பதற்கு பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்துடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வரலாற்றுபூர்வமான, அமைதியான, ஜனநாயக முறையிலான முதற் தேர்தல் முடிவுகளை தாம் வரவேற்பதாகவும், நவாஷ் ஷெரிப்பின் இரு மாபெரும் சவால்களாக, பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதுடன், இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதில் தங்கியிருப்பதாக ஒபாமா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இரு தடவை பிரதமராக இருந்து 1999ம் ஆண்டு, இராணுவ சதிப்புரட்சி மூலம் முஷாரப்பினால் பதவியிறக்கப்பட்ட 63 வயதான நவாஷ் ஷெரிப் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்க்கிறார்.

அவருக்கு கடும் சவாலாக கருதப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் பெரும் கவனத்தை பெற்றிருந்தார். அவர் வடமேற்கில் ஒரு மாநில அரசையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளார். அமெரிக்கா நடத்தும் ஆளில்லா ஏவுகணை தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் தீவிர பிரச்சாரம் செய்திருந்தார். இளைஞர்களிடையே இம்ரான் கானுக்கு அதிக செல்வாக்கு இருந்துவந்தது.

பாகிஸ்தான் தேர்தலை குழப்பும் வகையில் தலிபான்களின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்தல் தினத்தன்று 24 பேர் கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நவாஷ் ஷெரிப், தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், தனது டுவிட்டர் பக்கதில், பாகிஸ்தானுடனான உறவுக்கு புதிய பயிற்சி என வர்ணித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளை களைவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுப்பதாக தேர்தல் வெற்றிப்பேருரையில் நவாஷ் ஷெரிப் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

0 Responses to பாகிஸ்தானின் பிரச்சினைகளை களைவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட நவாஷ் ஷெரிப் அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com