ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீது, ஆந்திர மாநில அமைச்சர்கள், எம் எல் ஏ க்கள் என்று மொத்தம் 8 பேர்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புகார் கூறியுள்ளனர்.
அந்த புகாரில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்கிற பெரிய குற்றசாட்டை வைத்துள்ளனர். இதில் டென்ஷன் அடைந்த சோனியாவிடம், ஆந்திர பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் , நீங்கள் அமைதியாக இருங்கள் என்று, சோனியாவிடம் ராகுல்காந்தி ஆறுதலாக பேசியதாகத் தெரிய வருகிறது.
ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீது கட்சியினருக்குள்ளேயே பலர் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சித் தலைவர்களையோ அல்லது அமைச்சர்களையோ கலந்து ஆலோசிக்காமல், எந்த ஒரு முடிவாக இருந்தாலும் தன்னிச்சையாகவே எடுத்து விடுகிறார் என்றும் அவர் மீது பெரும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
கட்சித் தலைமையான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆந்திர அமைச்சர்கள், எம் எல் ஏ கள் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த புகார் மனுவில், தெலுங்கானா பிரச்சனையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி சவால் விடும் அளவுக்கு பேசுகிறார். அவரது பேச்சு தனித் தெலுங்கானா இப்போதைக்கு உருவாகாது என்பது போல இருக்கிறது. மேலும் கடலோர ஆந்திராவுக்கு மட்டுமே முதல்வர் போல செயல்படுகிறார். இதனால் தெலுங்கனா பகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாகிறார் உள்ளிட்ட பல புகார்களை கூறியுள்ளனர்.
ஏற்கனவே பல பிரச்சனைகளால் தலைவலி கொண்டுள்ள சோனியாகாந்தி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இது ஒரு பிரச்சனையா என்று நொந்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக, ராகுல் காந்தி இதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அமைதியாக இருங்கள் அம்மா, என்று கூறி இருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to ஆந்திர பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்! : சோனியாவிடம் ராகுல்காந்தி ஆறுதல்