ஈரோடு மாவட்டம் பர்கூர்
வனப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன், வனப்பகுதிக்குள்
மாடு மேய்க்க செல்லும், மலைவாசிகளை கரடிகள் தாக்குவதும் தொடர்கிறது.
கடந்த
16ஆம் தேதி தாமரைக்கரை வனப்பகுதியில் மாடுமேயத்துக்கொண்டிருந்த பொம்மன்
என்பவரை இரண்டு கரடிகள் துரத்தி வந்து தாக்கியுள்ளது. கடுமையான காயமுற்ற
பொம்மனை அப்பகுயில் இருந்தவர்கள் கரடியிடம் இருந்து மீட்டு அந்தியூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அதேபோல்
அடுத்த நாள் சோலகனை வனப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த முத்தரையன்
என்பவரை மூன்று பெண் கரடிகள் சுற்றி வந்து தாக்க தொடங்கியது. கரடியிடம்
இருந்து தப்பிக்க முத்தரையன் கூச்சலிட்டுள்ளார். அங்கு மாடு
மேய்த்துக்கொண்டிருந்த மலைவாசிகள் கரடிகளை துரத்திவிட்டு அவரை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கரடிகள் வனப்பகுதியில் தாக்கியதில்
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கடுமையான காயமுற்று
உயிர் பிழைத்துள்ளனர்.
கரடிகள்
அடர்ந்து வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வெளியிடங்களுக்கு வருகிறது.
அப்போது மனிதர்களை கண்டவுடன் தாக்க தொடங்குகிறது. குறிப்பாக பெண் கரடிகள்
ஆண்களையும், ஆண் கரடிகள் பெண்களையும் தாக்குவது வழக்கமாக உள்ளது.
ஜீவா தங்கவேல்
0 Responses to ஆண்களை தாக்கும் பெண் கரடிகள், பெண்களை தாக்கும் ஆண் கரடிகள்! ஈரோடு அருகே பரபரப்பு! (படங்கள் இணைப்பு)