தனித் தெலுங்கனா மாநிலம் அமைப்பது பற்றிய சாதகமான முடிவை வருகிற 30ம் திகதிக்குள் எடுக்காவிட்டால்,
கட்சியில் இருந்து விலகுவோம் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு அக்கட்சி எம்பிக்கள் 3 பேர் கெடு விதித்துள்ளனர்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட சில கட்சிகளும் சில மாணவர் அமைப்புக்களும் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன. தெலுங்கானா பகுதியை சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்களும் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்கு ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இந்த பிரச்சனையில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. காங்கிரசும் உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா எம்பிக்கள் 3 பேர் ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பின்னர் மத்திய அரசுக்கு இம்மாதம் 30ம் திகதிக்குள் தனித் தெலுங்கானா அமைக்கும் முடிவை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காவிட்டால், தாங்கள் ராஜினாமா செய்யப்போவது உறுதி என்று கூறியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
0 Responses to தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து 30ம் திகதிக்குள் முடிவு வேண்டும்:காங்கிரஸ் எம்பிக்கள் மூவர் மனு