லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டியும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என மேலும் வேண்டியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to உயிரினும் மேலான ஈழ உறவுகளே மீண்டும் ஒரு முறை முழங்குக! -வைகோ அழைப்பு