இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியா அமைத்து இருக்கும் பதுங்கு குழிகளை அகற்ற ஒப்புக் கொண்டதால்தான்,
சீன ராணுவம் தமது படையை திரும்ப பெற்றுக் கொண்டது என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி சீனப்படைகள், இந்திய எல்லையில் 19 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவி, முகாம் அமைத்து தங்கியிருந்தனர். இதனால் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. எத்தனையோ கட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகும் சீனப்படைகள் பின்வாங்காமல் ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் சாலை அமைக்கும் பணிகளில் தீவிரம் காண்பித்து வந்தது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய வெளியுறவுத் துறை செயலர், மற்றும் ஜப்பான் வெளியுறவுத் துறை செயலர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆகியோர் கூடி சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று கூட ஆலோசனை நடத்தினார்கள். இதை அதிரடியாக பார்க்க வேண்டும் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்க கூடாது என்று கூட இந்திய அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தன.
இப்பிரச்சனைக்கு சுமுகமான முறையிலேயே தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது என்று, பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருந்தார். இதற்கிடையில் சீன ராணுவம் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தமது படையை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே அமைத்து இருக்கும் பதுங்கு குழிகளை அகற்ற ஒப்புக் கொண்டதுததான் என்றும், இதை ஒரு ரகசிய உடன்பாடாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இப்பொது விவரம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சர்ச்சையும் எழுந்துள்ள நிலையில், இரு தரப்பு அதிகாரிகளின் சுமுகமான பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைக்கு சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. இதில் ரகசியம் ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சர்ச்சைக்குரிய தகவலை மறுத்துள்ளது. இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணம் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பதுங்கு குழிகளை அகற்ற ஒப்புக்கொண்டதால் சீன ராணுவம் வாபஸ் வாங்கியதா?