Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே மனைவியுடன் தகராறில், விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், மேலமடையைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சேகர்(42). கட்டிட தொழிலாளி. இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சேகர், வாழ்க்கையில் வெறுப்புற்று, சாக முடிவு செய்து, வீட்டில் யாரும் இல்லாத சமயம், தனது உடம்பி்ல் மண்ணெண்ணை ஊற்றி, தீயிட்டுக் கொண்டாராம்.

மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துமவனையில் சேர்க்கப்பட்டிருந்த சேகர், சிகிச்சை பலனின்றி நேற்று(சனிக்கிழமை) இறந்தார். சம்பவம் குறித்து, ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் மனைவி பால சுந்தரி புகார் செய்தார். காவல் ஆய்வாளர் துரை, சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, சேகர் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.

0 Responses to மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com