மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). வேன் டிரைவர். இவரது மனைவி வல்சலா (30). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபிஜித் (7), அசின் (5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.
ராஜேசுக்கும்,
வல்சலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குழந்தைகள்
எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என கருதி வல்சலா, 2 குழந்தைகளையும்
நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்து படிக்க வைத்து வந்தார்.
தற்போது விடுமுறை என்பதால் குழந்தைகள் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று காலை வல்சலா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அருகே 2 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். குழந்தைகளின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கப்பட்டு இருந்தது. கணவர் சித்ரவதை தாங்காமல் குழந்தைகளை கொன்று விட்டு வல்சலா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
தற்போது விடுமுறை என்பதால் குழந்தைகள் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று காலை வல்சலா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அருகே 2 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். குழந்தைகளின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கப்பட்டு இருந்தது. கணவர் சித்ரவதை தாங்காமல் குழந்தைகளை கொன்று விட்டு வல்சலா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மார்த்தாண்டம்
போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வல்சலாவின் சகோதரி
ராணி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். புகாரில் வல்சலாவை ராஜேசும்
அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்து வந்தனர். அவர்கள் தான்
வல்சலாவையும், குழந்தைகளையும் கொலை செய்து இருக்க வேண்டும். எனவே அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் இந்த
வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ராஜேஷ்,
அவரது தந்தை நாகமணி (68), தாயார் மேரி தங்கம் (65), சகோதரி ராணி (36) ஆகிய
4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ராஜேசும்,
நாகமணியும் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
போலீசார்
நடத்திய விசாரணையில் ராஜேசும், அவரது தந்தை நாகமணியும் வல்சலாவை தொடர்ந்து
சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. நாகமணி கழுவன்திட்டை பகுதியில்
பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், ராஜேசுக்கும் குடிப்பழக்கம் உண்டு. 2
பேரும் இரவில் குடித்து விட்டு வந்து வல்சலாவை அடித்து உதைத்து சித்ரவதை
செய்து இருக்கிறார்கள். மருமகள் என்றும் பாராமல் நாகமணி பலமுறை அவருக்கு
`செக்ஸ்' தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி ராஜேசிடம் வல்சலா கூறி கதறி
அழுதார். ஆனால் ராஜேஷ் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
வல்சலாவின்
மரணத்தால் தற்போது ராஜேசும், நாகமணியும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
0 Responses to மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது!