ஐ.பி.எல்.
கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீரர்களின் துணையோடு `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட
தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள்.
இந்த சூதாட்ட புக்கிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பது மும்பை நிழல் உலக தாதாக்கள் ஆவார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் தான் கிரிக்கெட் சூதாட்டம் கொடிக்கட்டி பறக்கிறது.
இந்த சூதாட்ட புக்கிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பது மும்பை நிழல் உலக தாதாக்கள் ஆவார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் தான் கிரிக்கெட் சூதாட்டம் கொடிக்கட்டி பறக்கிறது.
ஆட்டத்தை
பிக்சிங் செய்வதற்கு இளம் வீரர்களை நிழல் உலக தாதாக்கள் மிரட்டி வருவதும்
போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாவூத் இப்ராகீம், டைகர் மேமன்
ஆகியோர் தனது ஆட்கள் மூலம் இளம் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட மிரட்டி
உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து
உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது, சில சமயம் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட
மறுத்து பணத்தை வாங்க மாட்டார்கள். அப்போது அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
அந்த வீரர்கள் தங்கள் உயிருக்கு பயந்து தாவூத் இப்ராகீம், டைகர் மேமன்
பெயர்களை தெரிவிக்க மாட்டார்கள் என்றார். இதன்மூலம் ஐ.பி.எல்.
சூதாட்டத்தில் தாவூத் இப்ராகீமின் பங்களிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டது.
0 Responses to கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்