ஐபிஎல் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதானது எப்படி, என்று சில பர பரப்புத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சூதாட்டத்தில் வீரர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்து வரப்படும் வரை, தான் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்பது வீரருக்கே தெரியாதபடி, ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது போலீசாருக்கு மேலிடத்து உத்தரவாம்!
அதன் படி முபையில் கர்நாடகா சாலையில் ஸ்ரீசாந்த் சென்று கொண்டு இருந்த போது, டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை மடக்கி கைது செய்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போது ஸ்ரீசாந்துடன் காரில் அழகி ஒருவரும் இருந்துள்ளார்.
காரை இன்ஸ்பெக்டர் நிறுத்தியதும் ஸ்ரீசாந்திடம் தனது அடையாள அட்டையைக் காண்பித்து, ஸ்ரீ சாந்தை கைது செய்ய முயற்சித்து இருக்கிறார். தன்னை கைது செய்வதற்கு முதலில் ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இருந்தும் அவரை கைது செய்து இன்ஸ்பெக்டர் தனது காரில் ஏற்றி கொண்டார்.
அப்போது ஸ்ரீசாந்த் போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கேரளா, மற்றும் மராட்டிய மாநில முதல்வர்களை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், தனது அரசியல் செல்வாக்கு பற்றியும் கூறியுள்ளார். அதோடு இரு முதலமைச்சர்களில் யாரிடம் வேண்டுமானாலும் பேசி கொள்ளுங்கள் என்று தனது செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டரிடமும் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் கிரிகெட் வீரர்களை கைது செய்ய இருந்த 19 பேர் கொண்ட தனிப்படை போலீசாரிடம் கைது குறித்து எந்த ஒரு வீரரிடமும் தெரிவிக்க கூடாது என்றும், அறிவுரை வழங்கப்பட்டு இருந்த காரணத்தினால் போலீசார் ஸ்ரீசாந்தின் அலட்டல்களுக்கு பதில் சொல்லாமலே இருந்துள்ளனராம்.
3 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 11 தரகர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, கடந்த 9ம் திகதி அன்று டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரீஷ் தத், என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிய வருகிறது.
ஆனால், அந்த இன்ஸ்பெக்டர் மறுநாளே மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாகவும், டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டு பதிவு செய்வதில் நிபுணரான அவர், இந்த விவகாரம் தொடர்பாக 100 மணி நேர உரையாடல்களை பதிவு செய்துள்ளார் என்பதாகவும் வேறு சில தகவல்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அவரது திடீர் மரணம் குறித்த மர்மம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறதா என்பது கூடத் தெரியவில்லை.
கிரிகெட் சூதாட்டம் குறித்து, ஏப்ரல் மாதம் முதல் தகவல் அறிக்கையிலேயே தெரிய வந்து, போலீசார் கவனம் விசாரணையின் பக்கம் திருப்பிவிடப்பட்டது என்றாலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் யார் என்பது போலீசாருக்கு கடந்த வாரம்தான் தெரிய வந்திருக்கிறது.
0 Responses to ஸ்ரீசாந்த் கைதானது எப்படி : பரபரப்புத் தகவல்கள்