Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று (17.05.2013) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் புலமைப்பித்தன், புலவர் மறத்தமிழ்வேந்தன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் இராஜேஷ் ஆகியோரின் வரிகளுடன் உருவான "விடுதலைக்கு மரணமில்லை" ஒலிப்பேழை குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மதிமுக தோழர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு "பிரபாகரன்" என்று பெயரினை வைகோ அவர்கள் இந்நிகழ்வில் சூட்டினார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை எழும்பூர் பகுதி மதிமுகவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

0 Responses to சுதந்திரத்தமிழீழம் கானல்நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com