Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜுன் மாதம் இஸ்ரேலில் நடத்தப்படவிருக்கும் ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்.

பாலத்தீனப் பல்கலைக்கழகங்களுக்கான பிரிட்டிஷ் கமிட்டி பேராசிரியர் ஹாக்கிங்கின் ஒப்புதலுடன் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், இஸ்ரேலை கல்வியாளர்கள் புறக்கணிப்பதை மதிப்பது என்று ஹாக்கிங் எடுத்த சுயாதீனமான முடிவு இது என்று கூறியிருக்கிறது.

இந்த முடிவை அவர் பாலத்தீனம் பற்றி அவருக்கிருக்கும் தகவல்கள் மற்றும் அங்கு அவர் தொடர்பில் இருக்கும் கல்வியாளர்களின் ஆலோசனைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்திருக்கிறார் என்று அது கூறியது.

ஆனால் அவரது இந்த முடிவு உடல் நலக்காரணங்களால் எடுக்கப்பட்டது என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்காகப் பேசவல்ல ஒருவர் கூறினார்.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானியாக போற்றப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ். சாதாரண மக்களும் வாசித்து பயனடையும் வககயில் இலகுவான மொழியில் அறிவியற் சமன்பாடுகளை தவிர்த்து இவர் எழுதிய அறிவியல் நூல்களான A Brief History of Time, The Universe in a Nutshell என்பன உலகப்புகழ் பெற்ற நூல்களாகவும்.
தகவலுதவி : பிபிசி

0 Responses to இஸ்ரேல் அறிவியல் மாநாட்டை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புறக்கணிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com