மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடி ஊழியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சிப்
பட்டறையில் சிறப்புரையாற்றவும், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சேலம்
மாவட்டம் கருமந்துறைக்கு வந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத். பழங்குடி மக்களை சந்தித்தவர் பின் பேசிய அவர்,
"பழங்குடி மக்கள், காடுகளில் விவசாயம் செய்து பயன்படுத்தி வந்த நிலம் அவர்களுக்கே சொந்தம் எனும் சாதக விஷயம் உட்பட்ட வன உரிமைச் சட்டம் 2006 பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தமிழகத்தில் இதுவரையிலும் அமலுக்கு வரவில்லை.

நீதிமன்றத்தின்
தடையாணை இருப்பதால் சட்டத்தை அமல்படுத்தமுடியவில்லை என்று அரசு கூறி
வருகிறது. எத்தனை எத்தனையோ விசயத்திற்கு வெளி மாநிலம் சென்றெல்லாம் வழக்கு
நடத்துபவர்கள், பழங்குடி மக்களுக்காக வழக்கு நடத்தி நிலுவையில் உள்ளதை
நீக்க மாட்டார்களா? பழங்குடி மக்களை பலி வாங்குகிறது அரசு.
மலைவாழ் மக்களுக்கான இடத்தை வேறு நபர்கள் பெற முடியாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் சுற்றுலா என்ற பெயரில் வீட்டு மனை விற்பனையாளர்கள் புகுந்து மலைவாசிகளின் நிலங்களைப் பறித்துக் கொண்டு அவர்களை சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுகின்றனர்.
காடுகளை முன்னேற்றம் என்ற பெயரில் சுரங்கம், நீர்ப்பாசனம், பெரிய தனியார் நிறுவனங்களின் திட்டம் போன்றவற்றுக்காக கையகப்படுத்தும்போது, அங்கு வசிக்கும் மக்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் மக்களுக்கு பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் அரசின் இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், அந்த கட்சியை மக்கள் விரோத, மலைவாழ் மக்களுக்கு எதிரான கட்சி என்பதை அம்பலப்படுத்துகின்றன. இதற்காக நாடு முழுவதும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

தமிழகத்தில் உண்மையான பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோருக்கு சாதிச் சான்று
மறுக்கப்படுகிறது. அதேநேரம் தகுதி இல்லாதவர்களிடம் பணத்தைப் பெற்றுக்
கொண்டு பழங்குடியினர் என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே இதற்கான
நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும். காடுகள் பழங்குடி மக்களுக்கே
சொந்தம். ஆனால் தற்போது நிலங்களும், காடுகளும் அரசுக்கே சொந்தம் என்றும்
மலைவாசிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் கூறி விரட்டும் நிலை உள்ளது.
அடிப்படை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு சமுதாய ஒதுக்குதலுக்கு ஆளாகின்றனர் மலைவாழ் மக்கள். இவர்கள் இன்னல் தீர்க்காமல் தமிழக அரசு மெத்தனமாக,மெளனமாக இருக்கிறது....இந்த மௌனத்தை கலைக்கவில்லை என்றால் நானும் வீதியில் இறங்கி மக்களோடு மக்களாக போராடுவேன்...'என்றார்..

0 Responses to தமிழக அரசை கண்டித்து வீதியில் இறங்கி போராடுவேன்! சேலத்தில் பிருந்தாகாரத் முழக்கம்! (படங்கள் இணைப்பு)