பூமிக்கு வெளியே சந்திரனுக்கு அடுத்து அதனை ஒழுக்கில் சுற்றிவரும் மிகப் பெரிய துணைக்கோளாகப் கருதப் படுவது மனிதனால் அனுப்பப் பட்ட ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வுகூடம் அல்லது செய்மதி (Satellite) ஆகும்.
இதனுள்ளே பூச்சியத்துக்குச் சமனான ஈர்ப்பு விசை நிலவி வருவதால் இதில் ஆய்வில் ஈடுபட்டும் விண்வெளி வீரர்களின் அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கும் என அறிவதில் பலரும் ஆர்வம் காட்டக் கூடும்.
அந்த வகையில் விண்வெளி வீரர்கள் ISS இனுள்ளே எவ்வாறு உறங்குவார்கள் என சித்தரிக்கிறது நாசாவின் இந்த யூடியூப் வீடியோ கிளிப். கனேடிய விண்வெளி நிறுவனமான (CSA) இனைச் சேர்ந்த விண்வெளி வீரரான கிறிஸ் ஹட்ஃபீல்டு இதனை செய்முறையாக இதில் விவரிக்கின்றார். பல மாதங்களாக அல்லது வருடக் கணக்கில் பூமிக்கு வெளியே ISS இல் தங்கியிருந்து தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வீரர்கள் தமது உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்வதற்கென ஒவ்வொரு நாளும் முறையான உடற் பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவை உட்கொள்ளல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். தூக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்காகத் தனியான 6 அறைகள் ISS இன் நுனியில் Node2 எனும் இடத்தில் பின்புறம் Service module எனும் இடத்திலும் அமைந்துள்ளன.
இது நமது படுக்கையறை போன்றது என நம்பினால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஆம். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அறை அதிலும் நின்ற படி படுக்கை உறையை ஆடை போல் கொழுவிக் கொண்டு ஒரு நபர் மட்டுமே அடங்கக் கூடிய இடமுள்ள அந்த அறையை மூடியபடி உறங்க வேண்டும். வேடிக்கையாக உள்ளதா? வீடியோ கிளிப்பை நேரில் பார்த்து விட்டு நீங்களே கூறுங்கள் எப்படி அனுபவமென்று?

0 Responses to விண்வெளியில் ISS ஆய்வு கூடத்தில் உறங்குவது எப்படி?: செய்முறை (காணொளி இணைப்பு)