Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நாளை பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தலிபான்கள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை, பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடும் நவாப் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை நேற்றுடன் முடித்துக் கொண்டனர். இந்நிலையில் டேஹ்ரில்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருமான  இம்ரான்கான், நேற்று தொலைக்காட்சியில் தோன்றி இறுதிகட்ட பிரச்சாரம் செய்தார்.

 தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் மேடையில் இருந்து கீழே விழுந்துவிட்ட இம்ரான் கானுக்கு கழுத்து, முதுகு  எலும்பில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவாறே அவர் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் நாளை வாக்களிக்க கூட போக  கூடாது என்று,மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் தேர்தலின் போது தலிபான்கள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று, அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து லட்ச கணக்கான ராணுவ வீரர்கள் வாக்கு சாவடிகளில் அங்கங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

0 Responses to நாளை பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் : தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com