ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும் லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி 2013.
28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள ளுவுயுனுநு னுநுளு குஐடுடுநுவுவுநுளு மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.
ஐரோப்பியக் கொடியினை நெதர்லாந்தில் இருந்து வந்து கலந்து கொண்ட தமிழர் விளையாட்டுக்கழகத்தின் முக்கிய உறுப்பினர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியினை பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு விளையாட்டுத் துறைப்பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் மணிமகன் அவர்களின் தந்தையார் ஏற்றி வைக்க மலர் வணக்கத்தினை மாவீரர் லெப். அருள்வேலன் மாவீரர். ஞானதீபன் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரர் அவர்கள் செய்திருந்தார்.
அகவணக்கம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் தலைவர் திரு. சங்கரராஐh அவர்கள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் கொடியினை ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து இப்போட்டியில் பங்குகொண்டு சிறப்பித்த நாடுகளினதும் கழகங்களினதும் கொடிகள் சம நேரத்தில் ஏற்றி வைக்கப்பட்டன.
போட்டியின் தொடக்க உரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் அவர்கள் ஆற்றியிருந்தார். மாவீரர் லெப். கேணல் விக்ரர் ஒஸ்கார் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் மூத்தவர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த வீரர் என்பதோடு சிங்களத்திற்கு ஓர் சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்றும் அவரோடு இருந்து வாழ்ந்து போராடி புலம்பெயர் மண்ணில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்கள் உருவாக்கியது தான் இந்த ஐரோப்பிய ரீதியிலான இந்த உதைபந்தாட்டப்போட்டி இன்னும் மேலே சென்று சர்வதேச நாடுகளிற்கிடை யேயான போட்டியாக மிளிர்ந்து நிற்கின்றது என்றும் இந்த வருடம் மலேசியா நாட்டில் இருந்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கழகங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றியை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு. சங்கர்ராஐh அவர்கள் இப்போட்டி முறைகள் மைதான ஒழுங்குகள் பற்றிய விடையங்களை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முளவு வாத்திய அணியினர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.பார்த்திபன் மற்றும், மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், விருந்தினர்களுடன், சம்மேளனங்களின், கழகங்களின், உப கட்டமைப்பின் பொறுப்பாளர்கள், அனைவரையும் மைதானத்திற்கு அழைத்துச்
சென்றனர். கழக வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துதல்களையும் கூறி போட்டியை தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து மூன்று மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இன்றைய போட்டியில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றிருந்தன. கடுமையான கோடை வெயிலுக்கு மத்தியிலும் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஆசிய அணியான மலேசியா வீரர்களுடன் , ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த எம் தமிழ் வீரர்களும் ஒன்றுக்கொன்று சளைக்காது விளையாடியிருந்தனர்.
பிற்பகல் விடப்பட்ட சிறிய இடைவேளையில் தமிழ்க்குழந்தைகளின் இனிவரும் இனிவரும் காலங்கள் பாடலுக்கான இசைவும் அசைவும் நடனம் நடைபெற்றது. தமிழீழத்தேசிய நிறத்தை தாங்கி குழந்தைகள் நடன அசைவு எல்லோர் மனங்களிலும் ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தவர்களுக்கெல்லாம் ஓர் வியப்பாகவும், தமிழ்தமிழ் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடுகளில் இல்லாத மொழிப்பற்றும், பண்பாடும், கலையும் புலத்திலே ஓர் அந்நிய மொழிக்குள்ளும் கலாச்சாரத்திற்குள்ளும் எவ்வளவு சிறப்பாக வாழ்கின்றது வளர்கின்றது என்று கூறியிருந்தனர்.
இன்றைய உதைபந்தாட்ட போட்டியில் மூன்றாவது இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் - 93 தனதாக்கிக் கொண்டது.
இரண்டாவது இடத்திற்கான போட்டியை பிரான்சு நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் எதிர் மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொள்ள மைதானத்தில் மக்களின் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் நடுவர்களுடன் எழுச்சி இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை மாவீரர் குடும்பத்தினர், கிளைப் பொறுப்பாளர், மற்றும் தாய்த் தமிழகத்தில் இருந்து தமிழ்த் தொண்டாற்றுவதற்கும், தமிழ்மொழி ஆசிரியர்களுக்கு பயிற்ச்சியளிக்க கடந்த மாதம் பிரான்சுக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் அறிவுஅரசு ஐயா அவர்களும், மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கைகளைக் கொடுத்து வாழ்த்தினர்.
ஈழத்தமிழர் உதைபந்தாட்டசம்மேளன தலைவர் திரு. சங்கர்ராஐh அவர்கள் இப்போட்டியின் தொடக்குனர்கள் பற்றியும், ஏன் உருவாக்கம் பெற்றது என்றும், 10 வது ஆண்டில் சிறப்பாக இப்போட்டி நடைபெற்று வருவதையும், பங்குபற்றி சிறப்பித்த அனைத்துக்கழக கழகங்களுக்கும் சம்மேளனத்தின் சார்பாகவும், விளையாட்டுத்துறையின் சார்பாகவும் நன்றியை தெரிவித்தார்.
போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பித்தன முதலில் மலேசிய அணி ஒரு வெற்றிப்பந்தை போட அதனைத் தொடர்ந்து நல்லூர்ஸ்தான் ஒரு வெற்றிப்பந்தை போட்டிருந்தனர். இடைவேளையை தொடர்ந்து மீண்டும் நல்லூர் ஸ்தான் ஒரு வெற்றிப்பந்தை போட தொடர்ந்து மலேசியா தமிழர் அணி ஒரு வெற்றிப்பந்தை போட 2-2 என்கின்ற சம நிலையில் நேரம் முடிவடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெற்றி உதைமூலம் வெற்றிக்கழகம் தெரிவு செய்யப்பட்டனர். வெற்றி உதைகள் சமமாக சென்று கொண்டிருந்த வேளை நல்லூர் ஸ்தான் வி. கழகம் அடித்த பந்தை மலேசியா அணி பந்துகாப்பாளர் வெளியே தட்டிவிட்டு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
1 வது இடத்தை : மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகமும்.
2 வது இடத்தை : நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகமும்.
3 வது இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93. பெற்றுக்கொண்டனர்.
15 வயதிற்குட்பட்டவர்களின் உதைபந்தாட்டப்போட்டியில்
1 வது இடத்தை: டென்மார்க் தமிழர் விளையாட்டுக்கழகமும்
2 வது இடத்தை : பிரான்சு பாடுமீன் விளையாட்டுக்கழகமும்
3 வது இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93 – பிரான்சு
பெற்றுக்கொண்டன.
இவர்களுக்கான வெற்றிகிண்ணத்தையும், பணத்தையும் பொறுப்பாளர்களும் நன்கொடையாளர்களும் வழங்கி மதிப்பித்தனர்.
1 வது பரிசு 1000 ஈரோ
2 வது பரிசு 500 ஈரோ
3 வது பரிசு 250 ஈரோக்களையும் வழக்கியிருந்தனர்.
15 வயதிற்குட்பட்டவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை மாவீரர் கப்டன் ஆதவனின் நினைவாக அவரது சகோதரி வழங்கியிருந்தார்.
கழகக்கொடி, நாடுகளின் கொடி , தேசியக் கொடியிறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், தாரக மந்திரத்துடனும் உதைபந்தாட்டப் போட்டிகள் மாலை 8.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றன.
. தமிழர் விளையாட்டுக்கழகம் 93 – பிரான்சு
. தமிழர் விளையாட்டுக்கழகம் - நெதர்லாந்து
. பாரதி விளையாட்டுக் கழகம் – பிரான்சு
. பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் - பிரான்சு
. லூயிஸ் சாம் யுனைற்றற் - பிரித்தானியா
. குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம் - பிரான்சு
. உதயசூரியன் விளையாட்டுக்கழகம் - பிரான்சு
. தமிழீழ விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
. றநளவ டுழழெn - பிரித்தானியா
. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் - பிரான்சு
. தமிழர் விளையாட்டுக்கழகம் - மலேசியா
. நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் - பிரான்சு ஆகிய
கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.

0 Responses to தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும் அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி - 2013