சென்னை ஸ்பென்சர் ப்ளாசா
வணிக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணி அளவில், நகரும்
படிக்கட்டில் இருந்து ஒரு இளைஞர் குதித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள்
அவரை மீட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு
அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.
போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் பெயர் கிஷோர்குமார் (27) என்றும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
எதற்காக தற்கொலை முயற்சி என்று போலீசார் விசாரித்தபோது, அந்த இளைஞர் அதிரடி பதில் சொல்லி யுள்ளார். ‘’எனக்கு
ரொம்ப நாளா உயரமான இடத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்று ஆசை. அது
எனக்கு ஜாலி யாக இருக்கும் என்று நினைத்தேன். ஜாலியாக இருக்க வேண்டும்
என்றுதான் உயரத்தில் இருந்து குதித்தேன்’’ என்று கூறியுள்ளார் கை,கால்களை
முறித்துக்கொண்ட கிஷோர்குமார்.




0 Responses to ஜாலியாக இருக்க வேண்டும் என்று குதித்து கை, கால்களை உடைத்துக்கொண்டேன் : வாலிபரின் அதிரடி வாக்குமூலம் (படங்கள் இணைப்பு)