தோல்வி பயத்தில் திணறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்,
தமது கட்சியின் உறுப்பினர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கும்
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்
திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பிரபலம் மிக்க அரசாங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இருக்குமாயின் ஏன் தேர்தல் காலத்தில் இவ்வாறு பயப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இது, அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலையே காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலநறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பணம், படை, ஊடகம், அதிகாரம் என்று அனைத்து பலத்தையும் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிற அரசாங்கத்திற்கு தோல்விப் பயம் ஏற்பட்டு விட்டது. அதுதான், கோடிகளில் பணத்தை வாரியிறைத்து- பதவியாசைகளைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு இழுக்கின்றனர். இது, அரசாங்கத்தின் தோல்வியின் பக்கம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தயாசிறி ஜயசேகர அண்மையில் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார். இதன் மூலம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

0 Responses to தோல்வி பயத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திணறுகிறது: திஸ்ஸ அத்தநாயக்க