செவ்வாய்க்கிழமை காலை கஷகஸ்தானில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா ரஷ்ய ராக்கெட்டு விண்ணுக்குச் செலுத்தப் பட்டு சில விநாடிகளுக்குள் விண்னில் வெடித்துச் சிதறியது. இதன் மூலம் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப் படவில்லை.
ப்ரோட்டொன்-எம் (Proton-M) எனப் பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டு ரஷ்யாவின் பூகோள கண்காணிப்பு செய்மதி நிலையத்துக்கான (Glonass) இற்குத் தேவையான மூன்று செய்மதிகளுடன் விண்ணுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் இந்த Glonass எனப்படும் ரஷ்ய நிலையம் அமெரிக்காவின் GPS (Global Positioning System) இற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கஷகஸ்தானின் பைக்கொனூர் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப் பட்ட இந்த ராக்கெட்டின் பயணம் தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப் பட்டதால் இந்த விபத்து குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை இதே போன்று 3 செய்மதிகளுடன் புறப்பட்ட இன்னொரு ப்ரோட்டொன் - எம் ரக ராக்கெட்டும் பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விபத்துக்கான காரணத்தினைக் கண்டறியும் வரை மேலதிக விண்வெளி செயற்திட்டங்களை ரஷ்ய அதிகாரிகள் ஒத்தி வைத்துள்ளனர். இதேவேளை இந்த ராக்கெட்டு விபத்தால் ரஷ்ய அரசுக்கு 200 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கணிப்பிடப் பட்டுள்ளது.
தற்போது விபத்து நடந்த பகுதியில் பாதுகாப்புக் கருதி பொது மக்கள் வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.
0 Responses to ரஷ்ய ராக்கெட்டு விண்ணில் வெடித்துச் சிதறியது - 200 மில்லியன் டாலர் இழப்பு