Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பிரான்சில் அதிக மாநகரசபையை கொண்ட 93 மாவட்டப்பகுதியில் உள்ள தமிழர்களின் விளையாட்டுக்கழகமாகிய 93 தமிழர் விளையாட்டுக்கழகம் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இல்ல விளையாட்டுப்போட்டியை நடாத்தியிருந்தனர்.

புலம் பெயர் மண்ணில் தாய்மண்ணின் விடுதலைக்காக உழைத்து உயிரிழந்த லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகிய மாவீரர்களின் நினைவாக நடாத்தப்பட்ட போட்டி குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் பேனாலும் தாமதமாக பேட்டிகள் ஆரம்பித்திருந்தாலும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

ஈகைச்சுடரினை கடற்கரும்புலி சுதாஐpனி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறுவர்களுக்கான பாட்டிகள், ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் , தடையோட்டம், அஞ்சல் ஓட்டம், போன்றனவும் பார்வையாளர்களுக்கான தடையோட்டம், வயது வந்த ஆண்களுக்கான ஓட்டம் போன்றன நடைபெற்றன.

இவற்றினை பிரான்சு தமிழர் மெய்வல்லுனர் போட்டி உத்தியேகத்தினர் நடாத்தியிருந்தனர். பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். சிவப்பு நிறத்தை கொண்ட நாதன் இல்லம் 241 புள்ளிகளைப்பெற்று 1 வது இடத்தையும், 161 புள்ளிகளைப்பெற்று கயன் இல்லம் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்ககொண்டது. இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

0 Responses to பிரான்சில் 93 விளையாட்டுக்கழகம் நடாத்திய இல்ல விளையாட்டுப்போட்டி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com