Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”





இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கட்டுப்பாடுகளுடனேயே நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  விஜயம் மேற்கொள்ளும் இவர் இலங்கையில் இருக்கும் காலங்களில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கக் கூடாது என்றும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நவிப்பிள்ளை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வார் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்ப மாட்டார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கவும் நவநீதம்பிள்ளைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு நவனீதம்பிள்ளை பல முறை இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அரசாங்கம் அதனை நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகிறார் நவிப்பிள்ளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com