Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

 தமிழர் விடுதலைக் கூட்டணி முறையற்ற அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி அந்தக் கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மூவர் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களாக தங்கராஜா முகுந்தன் மற்றும் செல்லையா விஜயரட்ணம் ஆகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி சாதி அடிப்படையை முன்னிறுத்தி வேட்பாளர் தெரிவினை செய்துள்ளதாகவும், குடும்ப அரசியலை வளர்த்து முறையற்ற போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனிடையே, தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்னால் இன்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாத பட்சத்தில் மூவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பு மனுக்களை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் இன்று தாக்கல் செய்துள்ள நிலையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை கவனிக்கதக்கது.

0 Responses to தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கண்டித்து கட்சி உறுப்பினர்கள் மூவர் உண்ணா விரதம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com