பொதுமக்கள் உறவுகள் துறை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனாக மாலக்க
சில்வா அடையாளம் காணப்படாத குழுவொன்றினால் கூரிய ஆயுதங்களைக் கொண்டு
தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஏழு பகுதியிலுள்ள ஒடேல் என்கிற பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் வைத்தே மாலக்க சில்வா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனிடையே, குறித்த தாக்குதலை இராணுவ வாகனத்தில் வந்த சிலரே மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். கடந்த வருடத்தில் இரவு விடுதியொன்றில் வைத்து இராணுவ அதிகாரியொருவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். ஆனாலும், அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த அவரை இன்று அடையாளம் காணப்படாத குழுவொன்று கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளது.

0 Responses to மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க மீது கூரிய ஆயுதங்களினால் தாக்குதல்