Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”




9 ஜூலை 2012, ஒரு புது நாடு தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாகியது. 1955யில் உருவாகிய தென் சூடான் விடுதலை போராட்டம் பல வருட  ஆயுதப்போராட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களின்  படுகொலை, பட்டினிச் சாவுகளுக்கு பின் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், சில சர்வதேச நாடுகளின் தலையீடு  காரணமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட  ஒப்பந்தத்தில் ஜனவரி 2011யில் தென் சூடான் மக்கள் பொது வாக்கெடுப்பு ஊடாக தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர்.
 
9 ஜூலை 2012, உலகத்தில் 193ஆவது நாடாக தென் சூடான் உருவாகியது.
இன்று பிரான்சில் தென் சூடான் தூதுவராலயம்  தமது 2ஆவது சுதந்திர தினத்தை பாரிஸ் நகரில் சகல நாட்டு தூதுவராலயங்கள், மனித நேய அமைப்புகள், தொழில் சங்க அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் , பிரான்சு வெளிவிவகார அமைச்சு என்று எல்லோரையும்  அழைத்து தமது சுதந்திர விழாவை கொண்டாடினர்.
 
பிரான்சில் தமிழ் மக்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர்  மக்கள் அவையின் அங்கத்துவ அமைப்பாகிய பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைக்கு அழைப்பு விடப்பட்டு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டது.
 
சுதந்திர தின உரையின்  போது பேசிய தென் சூடான் தூதுவர், தாம் விடுதலை அடைத்த வரலாற்றையும் கூறி, தாம் ஒரு புது நாடாக இருப்பதால் பல கஷ்டங்களை சந்திக்கவேண்டி இருந்ததையும், அதில் இருந்து தாம் விடுபட்டு சுதந்திர காற்றை தமது மக்கள் அனுபவித்து கொண்டிருப்பதாகவும், தம்மை போல் சுயநிர்ணய உரிமை போராட்டத்தில் வெற்றி ஈட்டிய கொசோவோ இன்று இந்த சுதந்திர தின விழாவில்  இங்கு வந்து தங்களுடன்  இணைத்து கொண்டது பற்றி தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், அதே நேரத்தில் பல அழிவுகளுக்கு பின்பும் தமது போராட்டத்தை உறுதியோடு தொடரும் ஈழத் தமிழர்களுக்கு தமது ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.
 
இவ் நிகழ்வில்  கலந்து கொண்ட சோமாலி, கம்பியா நாட்டு தூதுவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை நன்றாக உணர்ந்து கொண்டு, தமிழர்கள்  விடுதலை அடையும் காலம் வரும், அத்தோடு தமிழர்கள்  இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்தும் கலந்து கொண்டு, தங்களது அடையாளங்களை வலியுறுத்த வேண்டும் என்று தமிழர் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்  . 
 
இவ் நிகழ்வில் கலந்துகொண்ட கொசோவோ நாட்டு பிரதிநிதி தமிழ் மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துரையாடும்போது  தனது ஆதரவை தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது .

0 Responses to சர்வதேச அரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com