Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”





சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பாரதி நகரை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(வயது 45). இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினராகவும், மண்டல மகளிர் அணி தலைவியாகவும் இருந்தவர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதில் இருந்து ராஜேஸ்வரி மிகவும் சோகமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று தனது உடலில் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி இன்று மாலை சிகிச்சை பலினின்றி பலியானார்.
 இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜராஜேஸ்வரியின் கணவர் பாபு கும்பகோணத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளார்.
 
 

0 Responses to தீக்குளித்த பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com