Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் ஜிஹாத் கிளர்சிப் படைகளினால் சிரியாவில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரன்ஸுவாஸ் முராத் எனும் குறித்த 49 வயதான பாதிரியார் சிரிய அரச படைகளுக்கு மறைமுகமாக உதவி செய்ததாக குற்றம் சுமத்தி பொதுவிடம் ஒன்றில் முன்னிலையில் குறித்த பாதிரியார் உட்பட மூன்று பேரை தலைவெட்டி படுகொலை செய்துள்ளனர் கிளர்ச்சி படையினர். இதனை தமது கைத் தொலைபேசிகளில் வீடியோ எடுத்து அவற்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 23ம் திகதி இப்பாதிரியார் கொல்லப்பட்டுள்ளதை வத்திகானும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இவ்வாறு ஈவிரக்கமின்றி கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது, கிளர்ச்சிப்படைகளுக்கு ஆயுத உதவி செய்து வரும் மேற்குலக நாடுகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியை கொண்டே இவ்வாறு தலையை வெட்டியுள்ளனர்.

இதேவேளை இப்படுகொலைகளை செய்துள்ள ஆயுதக் குழுக்களுக்கும் அல் கைதா போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு இடையேயும் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சிரிய கிளர்ச்சிப் படையினரால் கிறிஸ்தவ பாதிரியார் சிரச்சேதம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com