இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த் எனும் நகரை சேர்ந்ந்த மாத்யூ கிரீன்
எனும் 42 வயதான நார் கடந்த இரு வருடங்களாக இதயமின்றி வாழ்ந்திருக்கிறார்.
இவரது இதயம் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கார்டியோமயோபதி எனும் நோயால்
முற்றிலுமாக பழுதடைந்து செயல் இழந்தது.
இதையடுத்து கேம்பிரிட்ஷையரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயல் இழந்த இதயம் நீக்கப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் இரத்தம் பம்ப் செய்யப்பட்டது. அவருடைய முதுகுக்கு பின்புறம், ஒரு பையில் பம்ப் செய்யும் இயந்திரமும் பொருத்தப்பட்டது. பற்றரியுடன் இயங்கும் இந்த இயந்திரத்தின் உதவியுடன் அவர் 3 மணி நேரம் வீட்டிலிருந்து வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்த இயந்திரத்தை 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் இரத்த உறைவு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கிரீனுக்கு ஏற்றவாது இதயம் கிடைக்கவே, அதே மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் மிகவும் அதிஷ்டசாலி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் நான் இருதய மாற்று ஆபரேஷன் மூலம் மூன்றாவது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன் என்கிறார் இந்நபர்.

0 Responses to இதயமின்றி இருவருடங்கள் வாழ்ந்த பிரிட்டிஷ் நபர்