வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் தாக்கல்
செய்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை வேட்டு மனுக்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்துக்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை தாக்கல் செய்தனர்.
அதுபோல, வவுனியா மாவட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான குழுவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் இந்த செய்தி எழுதப்படும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to கூட்டமைப்பு யாழிலும், வவுனியாவிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது