Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பழம்பெரும் நடிகை தேவிகா கடந்த  2000ம் ஆண்டில் மறைந்தபிறகு  அவரது மகளும், பிரபல நடிகையுமான கனகா தனித்து விடப்பட்டார். 

படவாய்ப்புகளும் இல்லாத நிலையில் அவரைப்பற்றிய செய்தியே இல்லாமல் இருந்தது.  

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் அனாதைகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்று அதிர்ச்சி செய்தி வெளியானது.   இதையடுத்து இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்றும் செய்தி வெளியானது.

இந்த சூழ்நிலையில் நடிகை கனகாவே சென்னையில்  தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர்,  ‘’எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.  நான் நலமுடன் இருக்கிறேன்.  யாரோ சிலர் என்னைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள். ஆலப்புழாவில் நான் சிகிச்சைப் பெற்று வருவதாக வந்த தகவல்களும் தவறு.   என்னைக்கேட்காமலே உடல்நிலை சரியில்லை என செய்தி வெளிவந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.


செய்தியாளர்களை நேரில் சந்தித்ததன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கனகா.

0 Responses to நடிகை கனகா தவறிவிட்டதாக வதந்தி : கனகாவே நேரில் பரபரப்பு பேட்டி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com