ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு சட்ட
விரோதமானது என்று மும்பை நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு
கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சட்ட விரோதமானது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க புதிய குழு ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், மும்பை நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த 6 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று வீரர்கள் மற்றும் சூதாட்ட தரகர்கள் என்று மொத்தும் 32 பேர் கைதாகி, ஜாமீனில் வெளிவந்தும் உள்ளனர். இவர்கள் தொடர்பான குற்றப்பத்திரிகையை வருகிற 31ம் திகதிக்கும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய சூழலில் டெல்லி போலீசார் இருக்கின்றனர். இந்நிலையில் விசாரணைக்காக பிசிசிஐ நியமித்த இரு நபர் குழு, நேற்று முன் தினம் தமது விசாரணை அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மும்பை பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரவில்லை எனும் காரணத்தைக் காட்டி விசாரணைக் குழு மெய்யப்பனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்தது. அதே போல் ராஜ் குந்த்ராவின் நண்பர் உமேஷ் நாயகன் தான் முன்னால் கூறிய சூதாட்ட புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதால் அவருக்கு எதிராகவும் சாட்சிகள் இல்லை என்று குழு முடிவுக்கு வந்தது.
மும்பை நீதிமன்றம், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்து இருக்கும் விசாரணை குழு சட்ட விரோதமானது என்றும், மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு புதிய குழுவை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐபிஎல் சூதாட்டம் : பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு செல்லுபடியாகாது : மும்பை நீதிமன்றம்