வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்கிற ஐயம் ஈழத் தமிழ்த் தலைவர்கள் பலருக்கும் இருந்தது, இருக்கிறது. மாகாண சபைத் தேர்தல் நடத்துவதாக இருந்தால், அதற்குமுன், 13வது திருத்தத்தால் மாகாண சபைக்குக் கிடைக்கும் அதிகாரங்களைப் பறித்துவிடவேண்டும்... இல்லையேல் தேர்தலே நடத்தக் கூடாது - என்றெல்லாம் கொழும்பில் நடமாடும் கூலிப்படைகளின் 'தல' கோதபாய ராஜபட்சேவிலிருந்து அத்தனை பௌத்த ரவுடிகளும் சேர்ந்து குரல் கொடுத்ததே இந்த ஐயத்துக்குக் காரணம்.
நடைமுறையில் நாக்கு வழிக்கக்கூட உதவாத மாகாண சபை அதிகாரத்தை வைத்து,
தமிழர்கள் தனி நாடு அமைத்து விடுவார்களாம்..... இப்படியொரு பீதியை பௌத்த
சிங்கள வெறியர்கள் கிளப்பியபோது, எதற்கென்று புரிந்துகொள்ள முடியவில்லை.
கோதபாயவும் அதே கருத்தைக் கூறியபோது, இது இன்னொரு நாடகம் மாதிரி தெரிகிறதே
என்கிற சந்தேகம் எழுந்தது. நாச்சிகளும் நா.சா.க்களும், அவர்களுக்கு ஒத்து
ஊதுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் டெசோவும் 'உடல் மண்ணுக்கு, உயிர்
பதிமூன்றுக்கு' என்று இங்கேயிருந்து சவுண்ட் கொடுத்தபிறகு தான் - இது ஒரு
திட்டமிட்ட நாடகம் என்பது அம்பலமானது.
இந்த '13' நாடகம் எதற்காக என்று இதே பகுதியில் அலசி ஆராய்ந்திருக்கிறோம் என்றாலும், மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதில் தவறில்லை. அதற்குமுன், ஒன்றைத் தெளிவாகத் தெரிவித்துவிட வேண்டும்.... அறிவிக்கப்பட்ட தேதியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடக்கும்... சர்வ நிச்சயமாக நடக்கும். இதில் யாருக்கும் குழப்பமோ சந்தேகமோ வேண்டாம்.
உங்களுக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? எனக்கு மட்டுமில்லை... இன்னும் ஆறு பேருக்கு இது தெரியும். அவர்கள் - 1. மகிந்த ராஜபட்சே. 2. கோதபாய ராஜபட்சே. 3. பசில் ராஜபட்சே. 4. ஐயா.இரா. சம்பந்தன். 5. சி.வி.விக்னேஸ்வரன். 6. சேட்டன்.சிவசங்கர மேனன். நான் ஏழாம் மனிதன்.
வடமாகாணத் தேர்தல் நிச்சயமாக நடக்குமென்பது மட்டுமில்லை, அந்தத் தேர்தலை நடத்தினால்தான் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியாவிட்டால், இலங்கையின் கழுத்தில் இப்போதே சுருக்கு விழும் என்பதும் தெரியும். இப்போது சொல்லுங்கள், தேர்தல் நடக்குமா நடக்காதா?
இப்போது வருகிறேன் - '13' சர்ச்சைக்கு! அமெரிக்கத் தீர்மான மோசடி பார்முலா இருக்கிறதே - அதே பார்முலாதான் இதற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன், நீ அழுகிற மாதிரி நடிக்க வேண்டும் - என்கிற நயவஞ்சக பார்முலா. 'நயவஞ்சகம்' என்று ஆனபிறகு, இந்தியாவைத் தவிர வேறுயார் இந்த பார்முலாவை வகுத்துக் கொடுத்திருப்பார்கள்?
'2008 - 2009ல் தமிழரின் தாய்மண்ணில் சிங்கள ராணுவம் நடத்தியது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை' என்கிற குரல் இன்று உலகெங்கும் ஒலிக்கிறது. இந்தக் குரல் வலுவடைந்தால், 'இனப்படுகொலை செய்த இலங்கைக்கு காமன்வெல்த் மாநாடு ஒரு கேடா' என்கிற எதிர்க்குரல் வலுவடையும். கனடா வழியில் மேலும் பல நாடுகள் மாநாட்டுக்கு எதிரான நிலையை எடுக்க நேரும். இனப்படுகொலையை மூடிமறைக்க சர்வதேசத்தின் உதவியைக் கோரும் முயற்சி, கருவிலேயே சிதைந்துவிடும். காமன்வெல்த் மாநாடு தோல்வியடைவதின் மூலம், இலங்கையின் ரத்தவெறியாட்டத்தை உலக நாடுகள் எளிதில் உணரநேரும்.
உங்கள் வீட்டில் கல்யாணம் நடக்கப் போகிறது. ஊருக்கே அழைப்பு கொடுத்துவிடுகிறீர்கள், வீட்டு வாசலில் பந்தல் போட்டு விடுகிறீர்கள், 'கல்யாண சாப்பாடு போடவா' என்று (சட்டத்தை மீறி) கூம்பு ஒலிபெருக்கி கட்டி ஊரையே அதிரவைக்கிறீர்கள். இவ்வளவு செய்தாலும், யாருக்குக் கல்யாணம் - மாப்பிள்ளை யார் - மணமகள் யார் - எந்த ஊர் - என்ன பேர் - என்பதை எத்தனைப் பேர் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூறு பேரில் 99 பேருக்கு இதெல்லாம் நிச்சயமாகத் தெரிந்திருக்காது. அவனவன் அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால், இவ்வளவு ஏற்பாடு செய்தபிறகு, கல்யாணம் நின்றுவிடுகிறது என்று வையுங்கள்..... கல்யாண வீட்டில் இட்டிலி மாவு அரைத்தது யார் என்பதுகூட ஊருக்கே தெரிந்துவிடும். மாநாடு நின்றுவிடக் கூடாது - என்று இலங்கை பகீரதப் பிரயத்தனம் செய்வது ஏன் என்பது இப்போது புரிகிறதா உங்களுக்கு!
சர்வதேச அரங்கில் அம்பலமாகிவிடக் கூடாது என்கிற அச்சத்தால்தான், காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்திவிட தலைகீழாக நிற்கிறார்கள் ராஜபட்சே சகோதரர்கள். அவர்கள் அப்படியாவது அம்பலமாக வேண்டும் - என்று நம்மைப் போன்றவர்கள் ஒற்றைக்காலில் நிற்கிறோம்.
அவர்கள் திட்டமிட்டு நடத்தியது - 'இனப்படுகொலை'. அந்த வார்த்தையை வைத்தே சர்வதேசத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்ப முயல்கிறோம் நாம். அதைத் திசை திருப்ப, அவர்களுக்கு '13' என்கிற மோசடி வார்த்தை தேவைப்பட்டது. அதைப் பறிப்போம் என்று மிரட்டுவதன்மூலம், 'அதைக் காப்போம்' என்று இனப்படுகொலைக்கு உதவிய தங்கள் நண்பர்களைப் பேசவைப்பதன் மூலம், காமன்வெல்த் மாநாடு வரை 'இனப்படுகொலை' என்கிற முழக்கத்தை முடக்குவது தான் அவர்களது நோக்கம். இனப்படுகொலை - நடப்பதை அறிந்தும், பதவிப் பித்தில் சகலத்தையும் பொத்திக் கொண்டிருந்த பெரியவர்களெல்லாம், '13' '13' என்று ஆவேசமாகப் பேசுவதைப் பார்த்த பிறகுமா நமக்கு இது புரியவில்லை!
நாங்களும் போடுவோம்ல தீர்மானம் - என்கிற மாதிரி அவர்கள் போடுகிற தீர்மான காமெடியை, டாப் டென் காமெடியிலிருந்து கேப்டனைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் அமர்த்திவிடலாம் போலிருக்கிறது. அப்படியிருக்கிறது அந்தக் காமெடி.
"இதுவரை போட்ட எந்த ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, தற்போது சிவசங்கர் மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதிமொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் கேள்விக்குறியாகும்" என்கிறது டெசோவின் தீர்மானம். கூடவே, காமன்வெல்த்தில் கலந்துகொள்ளக் கூடாது - என்று இந்தியாவுக்குக் கோரிக்கையும் வைக்கிறது டெசோ.
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான எதிர்ப்புகளை முறியடித்து, அந்த மாநாட்டைத் தங்கள் உயிர்த் தோழன் ராஜபட்சே தலைமையில் திட்டமிட்டபடி நடத்துவது எப்படி - என்று ஆலோசனை சொல்வதற்காக அல்லாமல் வேறு எதற்காக சேட்டன் சிவசங்கர் கொழும்பு சென்றார் என்று நினைக்கிறார்கள்! இப்படி விவரம் தெரியாத வீரமணிகளாகவே இருந்தால் எப்படி?
இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் இலங்கை காப்பாற்றியதில்லை - என்பது நன்றாகத் தெரியும் இவர்களுக்கு! மறந்து போயிருந்தார்களென்றால், அறிவாலயம் நூலகத்தில் இருக்கிற புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். (நூலகத்தில் ரோமாபுரிப்பாண்டியனும் தொல்காப்பியப் பூங்காவும் மட்டும் வைத்திருந்தால் போதுமா? படிப்பதற்கும் ஏதாவது வைத்திருக்க வேண்டாமா?)
ஈழத்து காந்தி தந்தை செல்வாவுடன் சிங்கள வெறியர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் என்னவாயிற்று? டட்லி - செல்வா உடன்பாடு, பண்டா - செல்வா உடன்பாடு எல்லாம், குப்பைத் தொட்டிக்குப் போனது எப்படி? பண்டாவின் உடல் சவப்பெட்டிக்குப் போனது எப்படி? ராஜீவுடன் ஒப்பந்தம் செய்த 72 மணி நேரத்தில், அதைக் குப்பைக் கூடையில் போடத் தயாரான ஜெயவர்தனே யார்? இன்றைய செய்தி நாளைய வரலாறு - என்றெல்லாம் வார்த்தை ஜாலம் செய்பவர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டாமா?
இது தெரியாமலா, 'இந்த உறுதிமொழி எந்த அளவுக்குக் காப்பாற்றப்படும் என்பது கேள்விக்குறி' என்று டயலாக் எழுதுகிறார்கள்! எழுதியவர்களும் சரி, அதைப் படித்துக் காட்டுபவர்களும் சரி, தாங்கள் கூட்டம் நடத்துவது சத்தியமூர்த்தி பவனில் இல்லை, அறிவாலயத்தில் என்பதை உணரவேண்டாமா? இவ்வளவுக்குப் பிறகும் - கேள்விக்குறிபோல் முதுகு வளைந்து இருப்பது எதற்காக?
உப்புச்சப்பில்லாத ஒரு உருப்படாத தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தபோது, 'அதை இந்தியா ஆதரித்தே ஆகவேண்டும்' என்று இவர்கள் சொன்னதற்கும், 'அந்தக் கவைக்குதவாத தீர்மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நடந்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஒருவரித் தீர்மானத்தை ஜெனிவா மாநாட்டில் இந்தியாவே கொண்டுவரவேண்டும்' என்று டாக்டர் மைத்ரேயன் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? இந்த வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டதால்தானே, மைத்ரேயன் சொன்னதன் அடிப்படையில் டி.ஆர்.பாலு பேச நேர்ந்தது!
இதை மறந்துவிட்டு, 'இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடெல்லாம் நடக்கவே கூடாது' - என்கிற ஒற்றைத் தீர்மானத்தின் மூலம் ராஜபட்சேவின் சட்டையைப் பிடித்து உலுக்காமல், பொத்தாம் பொதுவாக பத்துப் பதினைந்து தீர்மானம் போட்டுத் திசை திருப்ப முயல்கிறார்களே, ஏன்? இனப்படுகொலை - என்கிற வார்த்தையே ஆயுதம் என்பதை உணரவில்லையா.... அல்லது, சொக்கத் தங்கங்களை மீறி அந்த உண்மையைப் பேசுகிற துணிவு இல்லையா?
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாடு எதற்கு - என்று நேரடியாகக் கேட்காமல், பிரதமருக்கு '13' பற்றி முதல்வர் கடிதம் எழுதுவதும், "ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சுய மரியாதையுடன் வாழ வழிசெய்வோம்" என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பியை மன்மோகன்சிங் முதல்வருக்கு அனுப்பிவைப்பதும் கூட காமெடியாகத் தான் இருக்கிறது.
இப்படி இங்கே இருக்கிற ஆகப்பெரிய அரசியல் கட்சிகள் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாமல், இலங்கைக்கும் ராஜபட்சேவுக்கும் தலைவலியும் தந்துவிடாமல், 'ராஜதந்திரத்துடன்' அறிக்கை விட்டுக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இதுவே எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது விக்னேஸ்வரனுக்கு!
யார் விக்னேஸ்வரன், அவருக்கும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் என்ன 'சம்பந்தம்' என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது. அது ஈழ அரசியல். அவர்தான் இன்றைக்கு, வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர். நம் ஊர் அரசியல்வாதிகளின் தவறுகளை நாம் கண்டிக்கலாம், அவர்களைத் தோலுரிக்கலாம். அது நமது உரிமை, கடமை. ஈழ அரசியலில் நாம் தலையிடுவது நாகரிகம் அல்ல.
மெய்யாகவே போராடிய அந்த மக்களின் விடுதலைப் போரை நாம் போற்றலாம், அந்த மாவீரர்களை மனத்தில் இருத்திக் கொண்டாடலாம், அதற்குத் தடை விதிக்க முயன்றால் - 'அவர்கள் தான் எங்கள் வணக்கத்துக்குரிய வீரர்கள்' என்று வெளிப்படையாக அறிவிக்கலாம். ஆனால், அவர்கள் மண்ணில் இருக்கிற அரசியல் பற்றி இங்கிருந்து நாம் விமர்சிப்பது முறையல்ல. அதே சமயம், இங்கேயிருக்கிற அரசியல்தலைவர்களைப் பற்றி அங்கேயிருந்து விக்னேஸ்வரனும் விமர்சிக்கக் கூடாது. அந்த அடிப்படையில்தான் எழுத நேர்ந்துவிட்டது, அவரைப் பற்றி!
விக்னேஸ்வரன் கொழும்பில் நீதிபதியாக இருந்தவர் என்பது செய்திகள் வாயிலாகத் தெரிகிறது. இனப்படுகொலைகள் நடந்த காலகட்டங்களில், இனப்படுகொலைக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தாரா இல்லையா என்கிற விவரம் தெரியவில்லை. ஒன்று மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது...
இனப்படுகொலைக்குத் துணைபோன மன்மோகன் சிங்கும், இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபட்சேவும் என்ன சொல்லிவருகிறார்களோ அதை வார்த்தையைக் கூட மாற்றாமல் அப்படியே சொல்கிறார் என்பது.
இலங்கைப் பிரச்சினையைத் தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் - என்பது விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு. இனப்படுகொலை நடந்த சமயத்தில் மூச்சே விடாமல் தேர்தல் சமயத்தில் மேடையேறும் விக்னேஸ்வரன் என்ன ஆதாயத்துக்காக இப்படி திடீர் மாப்பிள்ளை ஆகியிருக்கிறார் - என்று நாம் பதிலுக்குக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது நாகரிகமல்ல. 'இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணவேண்டும்' என்று மன் - மகி - குரலில் பேசுகிறாரே, அதைப் பற்றித்தான் கேட்கவேண்டியிருக்கிறது.
இலங்கை ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் - என்கிற மகிந்தனின் நோக்கம் உங்களுக்கும் இருப்பதைப் பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை நீதியரசர் அவர்களே.... அந்த உயர்ந்த - கண்ணியமான - தேசபக்தியுள்ள ஒரே நோக்கத்துக்காகத் தான் மகிந்தன் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றான் நீதியரசரே! அந்த ஒன்றரை லட்சம் பேரும் அவனுடைய தனிப்பட்ட எதிரிகளா... ஜென்ம விரோதிகளா.... இல்லை விக்னேஸ்வரன் அவர்களே.... ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றால்தான் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றமுடியும் - என்ற 'மேன்மையான லட்சியத்துடன்' தான் அந்த இனப்படுகொலை நடந்தது. (மேலதிக விவரங்களுக்கு சம்பந்தன் ஐயாவுடன் மன்னாருக்குப் போய் ராயப்பு ஜோசப்பைச் சந்தியுங்கள் விக்னேஸ்வரன்!)
நான் கேட்பதெல்லாம், ஒருமைப்பாட்டைக் காக்க மகிந்தன் ரேஞ்சுக்கு கைவசம் விக்னேஸ்வரன் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதைத்தான்! அவர் பேசுவதைப் பார்த்தால், ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
இனத்தையே படுகொலை செய்தாலும் இணைந்துதான் இருக்கவேண்டும் - என்கிற விக்னேஸ்வரனின் தேசபக்தி, என்னுடைய நண்பர்கள் அப்புசாமியையும் குப்புசாமியையும் மெய்சிலிர்க்க வைக்காவிட்டாலும், என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தத் தேசபக்தியைப் புரிந்துகொள்ளாமல், 'இலங்கை இணைந்தே இருக்கவேண்டும்... வடக்கும் கிழக்கும் மட்டும் பிரிந்தே கிடக்கவேண்டுமா' என்று கேட்கிறார்கள் அப்புவும் குப்புவும். விக்னேஸ்வரன் தான் பதில் சொல்லவேண்டும்!
உங்கள் நாட்டுப் பிரச்சினைக்காக ஏன் இன்னொரு நாட்டை அணுகுகிறீர்கள் - என்கிற இந்தியச் செய்தியாளரின் கேள்விக்கு விக்னேஸ்வரன் அதிபுத்திசாலித்தனமான பதிலை அளித்திருக்கிறார். 'பக்கத்துவீட்டில் மனைவியைக் கணவன் அடித்துக் கொல்கிறான். அடுத்த வீட்டுக்காரர் பார்த்துக் கொண்டிருக்கலாமா? குறுக்கே புகுந்து தடுக்க வேண்டாமா' என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் விக்னேஷ். (அடுத்த வீட்டுக்காரர் - என்று அவர் குறிப்பிடுவது இந்தியாவையாம்!)
விக்னேஸ்வரன் அவர்களே! ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீதியரசராகிய உங்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். பக்கத்து வீட்டில் கணவனிடம் அடிபடும் பெண் மீது அடுத்த வீட்டுக்காரனுக்கு ஏற்கெனவே ஒரு கண் இருந்தது என்று வையுங்கள்... ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சேஷ்டை செய்து அந்த உத்தமப் பத்தினியிடம் இந்தப் பொறுக்கி செருப்படி வாங்கியிருந்தான் என்று வையுங்கள்.... கட்டையால் அவளை அடிக்கிற கணவனின் கையில் கத்தியைக் கொடுப்பானா மாட்டானா? அதுதானே நடந்தது இங்கே.... அடித்து மிதித்த இலங்கைப் பொறுக்கிக்கு ஆயுதம் கொடுத்த பொறுக்கி யார்?
விக்னேஸ்வரன் அவர்களே! இங்கே எங்கள் சகோதரி கவிதாயிணி கனிமொழியை அரசியலில் இறக்கும்போது, அதற்கென்றே ஒரு போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே போன்று, உங்களை அரசியலில் இறக்க கொழும்பு நகரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் நீங்கள் பேசியதையும், இந்தியப் பத்திரிகையான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளரிடம் நீங்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்துடன், 1983 ஜூலை இனப்படுகொலையையும், 2009 இனப்படுகொலையையும் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அதற்கு முன் இணையதளம் ஒன்றில் எங்கள் ஈழத்து உறவு ச.நித்தியானந்தன் கண்ணீரால் எழுதியிருக்கிற கவிதையின் சில வரிகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
"பொய்க் காலுடன் ஒருவன் முன்னே போகிறான்
இரண்டு கைகளும் இழந்த தோழி அதோ....
பக்கத்தே பாருங்கள்... நான்கு பிள்ளைகளையும்
வேள்விக்கு இரையாக்கி நொய்ந்துகிடக்கும் ஒரு தாய்.
வேரிழந்து விழுதுகளிழந்த ஒரு தந்தை
அந்தோ... கச்சான் விற்கிறார்.
ஊன் உயிர் அனைத்தையும் விடுதலைக்குக் கொடுத்த
ஒரு சமூகம் வதங்கிக் கிடக்கிறது....
.................................................................................
...................................................................................
தழும்பு சுமந்தவர்களுக்கு தாழ்வு
கொழும்பு சுமந்தவர்களுக்கு வாழ்வு!"
ஜேர்மன் இளையோர் அமைப்பு உள்பட உலகின் அனைத்துத் திசைகளிலும் கறுப்பு ஜூலை தினத்தைக் கடைப்பிடித்திருக்கும் எங்கள் இளையோருக்கு நித்தியானந்தனின் கவிதையைக் காணிக்கையாக்குகிறேன். ஈடு இணையற்ற எங்கள் இளையோரே, இதை உங்களுக்குக் காணிக்கையாக்காமல் விக்னேஸ்வரன் ஐயாவுக்கா ஆக்க முடியும்?

0 Responses to மேன்மைமிகு நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களே...! புகழேந்தி தங்கராஜ்