Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சித்தார்த்தன், யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளதோடு புளொட் அமைப்பிலிருந்து இம்முறை 5 பேர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்கள்.

யாழ் மாவட்டத்திலிருந்து த.சித்தார்தன், வவுனியா மாவட்டத்திலிருந்து வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கந்தையா சிவநேசன் (பவன்), மன்னார் மாவட்டத்திலிருந்து இருதயராஜா சார்ள்ஸ்  ஆகியோரே புளொட்டின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பங்களிக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தங்களுடைய வேட்பாளர் விபரங்களை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அதன் பிரகாரம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில தினங்களில் எனைய பங்களிக் கட்சிகளின் வேட்பாளர் விபரமும் அறிவிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத காரணத்தினால் இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சி என்கிற பெயரிலேயே தேர்தலில் போட்டியிடும்.

0 Responses to வடக்கு தேர்தல்: புளோட்டின் தலைவர் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் போட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com