Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரனுடன் பேசுவேன் என்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் 13வது திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டாலும், அன்றிலிருந்து இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

அப்படியிருக்கும் சந்தர்ப்பத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தற்போது கவனம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களை அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து உரையாடும் போதே, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது காணாமல் போனோர் குறித்து கண்டறியும் முகமாக மூன்று முக்கியஸ்தர்கள் அடங்கிய ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளதாகவும், அந்த ஆணைக்குழு எந்தவித தலையீடுகளும் இன்றி சுதந்திரமாகவும்- சுயாதீனமாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி குறித்த சந்திப்பில் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to அவசியம் ஏற்படும் பட்சத்தில் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேசுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com