Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி  டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாய நிலங்களின் நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை விதித்து இருக்கிறார். இதுத் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஒரு நிபுணர் குழுவை நியமித்து உள்ளதாகவும், அந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின்படி தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், உலகத்தாரை தாங்கி நிற்கும் அச்சாணியாக விளங்கும் உழவுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. மக்களுக்காகத் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பதே எனது தலைமையிலான அரசின் குறிக்கோள்.

எனவே, விவசாய நிலங்களை பாழ்படுத்தும் மீதேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கண்டு விவசாயிகள், தங்களது  விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ, என்று அச்சப்படுகிறார்கள் இதனாலேயே, இந்த திட்டத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒருநிபுணர்  குழுவை அமைக்க உத்தரவிட்டு இருக்கிறேன். அந்த நிபுணர் குழு 3 மாதத்தில் இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பின்னர் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக் அரசு முடிவெடுக்கும். என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிக்கையைக் கேட்டு, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to மீத்தேன் வாயு திட்டத்துக்கு முதல்வர் தடை : நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com