Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகாராஷ்டிரா சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள 50 கைதிகள் சிறையில் ரம்ஜான் நொன்பு இருக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் மகாராஷ்டிரா சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவ்வளவு எளிதில் ஜாமீன் கிடைக்காது. மேலும் சிறையிலும் இவர்களுக்கு கெடுபிடிகள் அதிகம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இவர்கள் அனைவரும் ஆர்தர் ரோடு மற்றும் கல்யான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சார்பாக ஜமாயித் உலமா இ மகாராஷ்டிரா என்ற தன்னார்வ அமைப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று விசாரித்து, சிறப்பு குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள 50 கைதிகள் சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இவர்கள் அனைவருக்கும் சூரிய உதயத்துக்கு முன்பு காலை உணவும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவு வழங்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் கைதிகளின் வீடுகளில் இருந்து உணவு  வந்துகொடுக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

0 Responses to சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்க கைதிகளுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com