சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய
வழக்கில், ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 39 வயது பெண் தன் கணவருடன், மத்திய பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள சில சுற்றுலா தலங்களைப் பார்த்த பின் உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்காக தன் தோழருடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது தாதியா மாவட்டம் சீவ்டா வனப்பகுதியில் இரவு நேரத்தில் தங்கியிருந்தார். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்ட கும்பல் ஒன்று, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனையடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட, ஆறு பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த கூடுதல் மாவட்ட நீதிபதி ஜிதேந்திர சர்மா அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட போது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து பெண்ணும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரது பயணச் செலவுக்கா மத்திய பிரதேச அரசு 8.5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிப்பதாக குறித்த சுற்றுலாப் பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சுவிற்சர்லாந்து சுற்றுலாப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆறு இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனை