Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உடல் பாகங்களால் தொடாமல் இசைக்கப் படும் எலெக்ட்ரானிக் இசைக்கருவியான தெரெமின் (Theremin) ஐ இசைப்பதில் ஜப்பான் இசை வல்லுநர்கள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

அதாவது ஜப்பானின் ஹமாமட்சு நகர மத்தியில் அதிகூடிய இசையமைப்பாளர்கள் (272 பேர்) இணைந்து ஒரு வைபவத்தில் இக்கருவியை இசைத்து சாதனை படைத்துள்ளனர். சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தெரெமின் இசை நிகழ்ச்சியே இதுவரை இடம்பெற்றவற்றில் மிகப்பெரிய தெரெமின் கச்சேரி (Orchestra) என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்துக்கான பேச்சாளர் உறுதிப் படுத்தியுள்ளார்.

மேலும் இவ்வைபவத்தில் வெளிப்படுத்தப் பட்ட  இசை மிக நேர்த்தியானதாகவும், தூய்மையானதாகவும் சில சந்தர்ப்பங்களில் அச்சமூட்டக் கூடியதாகவும் இருந்ததாக விமர்சிக்கப் பட்டுள்ளது. இவ்வைபவம் மசாமி டக்கேயூச்சியா என்பவரால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இவர் தெரெமின் ஐ இசைக்கும் முறையை ரஷ்யாவிற்குச் சென்று கற்றுக் கொண்டார்.

தெரெமின் இசைக்கருவி பொதுவாக சதுர வடிவத்துடன் சில வகைகள் சிறிய ரஷ்ய பொம்மைகளையும் கொண்டிருக்கும். உலகில் உள்ள மிக அரிதான அபூர்வ இசைக்கருவிகளில் தெரெமினும் ஒன்று ஆகும். இந்த இசைக்கருவி 100 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய நாட்டில் லெயோன் தெரெமின் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. இதில் இருந்து வெளிப்படும் இசை சில விஞ்ஞானப் புனைவு (science fiction) மற்றும் Hitchcock இன் திரைப்படங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் அசலான தெரெமின் இசைக்கருவி 1922 ஆம் ஆண்டு ரஷ்ய தலைவர் விளாடிமிர் லெனின் இனால் லெயோன் தெரெமினுடனான நிகழ்ச்சி ஒன்றில் பரிசோதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இசைக்கருவியை தொடாமல் இசைப்பதில் புதிய உலக சாதனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com