இன, மத பேதங்கள் மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி
பயணிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
30 வருடங்களாக நீடித்த மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதற்கு மத, இன பாகுபாடுகள் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை ரம்புக்கன் ஓயா நீர்த்தேக்கத்தினை நேற்று சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்ததுபோல பசி, பட்டினி, வறுமை ஆகியவற்றிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இந்தவேளையில் தேவையற்ற பிரிவினைகளுக்குள் சிக்கி கொள்ள வேண்டாம். இன, மத பேதங்கள் இன்றி இலங்கையராக எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மக்கள் அனைவரும் பேதங்கள் மறந்து ஒன்றிணையும் காலம் மலர்ந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ