நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதிகாரங்கள் மாகாண முதலமைச்சர்களுக்கு இருக்கின்ற பட்சத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது அவசியமானது.
ஆனாலும், தற்போது அதற்கான அவசரம் தேவையற்றது என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாகாண முதலமைச்சர்களுக்கு அதீதமான அதிகாரங்கள் இருக்கும் பட்சத்தில் அதை நீக்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. அதுபோல, நாட்டில் பிரிவினை என்கிற விஷம் கலந்துவிடக் கூடாது என்றார்.
சகல இனங்களுக்கும் பொதுவான அரசியலமைப்பே அவசியமானது. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கிற நிலையில் திருப்பவும் அதற்கான வாய்ப்புக்களை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to தற்போதைய நிலையில் 13வது திருத்த சட்டத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல - சரத் பொன்சேகா