யாழ் வடமராட்சி பல்லல்பை பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை கிணறு
ஒன்றிலிருந்து 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப்பிரதேசமானது கடந்த
15 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டிலிருந்துள்ளது. இந்த நிலையில்
படையினரால் இப்பகுதி மக்களின் பாவைனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் கிணறு
சுத்தம் செய்ய முற்பட்ட வேளையில் இவ் எழும்புக்கூடுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும் இப்பிரதேசத்தில் கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என படையினர் காணி உரிமையாளர்களிடம் உத்தவிட்டுள்ளனர். அதேநேரம் அங்குள்ள கிணறுகள் அனைத்தும் படையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் மேலும் பல சடலங்கள் இருப்பதாக பிதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுதொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்கக்கூடாது என படையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

0 Responses to வடமராட்சி பல்லப்பையில் 17 எலும்புக்கூடுகள் மீட்பு! (காணொளி இணைப்பு)